எம்பிரஸ் பிளேஸ் வட்டாரத்தில் பத்தாண்டுக்குமுன் தோண்டி எடுக்கப்பட்ட அரும்பொருள்களைக் கூடிய விரைவில் பொதுமக்கள் பார்க்க வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.
2015ஆம் ஆண்டு எம்பிரஸ் பிளேஸ் வட்டாரத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டபோது சீனப் பீங்கான்கள், காசுகள் என 2.5 டன் எடையுள்ள அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஹெரிடேஜ்எஸ்ஜி அமைப்பு உருவாக்கும் ஆர்க் ஸ்குவேர் அரும்பொருளக நிலையத்தில் நவம்பர் மாதம் இந்த அரிய பொருள்களைப் பொதுமக்கள் காண முடியும்.
சிங்கப்பூரின் தொல்பொருள் சேமிப்பை மக்களிடம் முன்வைக்கவும் சிங்கப்பூரின் தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமை வல்லுநர்களுக்கு ஒரு மையமாகத் திகழவும் ஆர்க் ஸ்குவேர் உருவாக்கப்படுகிறது.
புதிய ஆர்க் ஸ்குவேர் நிலையம் 125 ஜாலான் சுல்தானில் அமைந்துள்ளது.
நிரந்தர படைப்புகளை ஒரு புறம் கொண்டிருக்கும் நிலையத்தில் வெவ்வேறு கண்காட்சிகள் சுழற்சி முறையில் இடம்பெறும்.
தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமை வல்லுநர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் ஆர்க் ஸ்குவேர் நிலையத்தில் இடம் ஒதுக்கப்படும்.
ஆர்க் ஸ்குவேர் நிலையத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும். அதில் தொல்பொருள் ஆய்வுகளை எப்படி செய்வது என்று பொதுமக்கள் கற்றுக்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கும் அந்தப் பயிற்சிகள் 90 நிமிடங்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு பயிற்சியின்போதும் அதிகபட்சம் ஐவர் பங்கேற்கலாம்.