தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் பாம்பினங்களைப் பற்றி தெரிந்துகொள்ள அரிய வாய்ப்பு

2 mins read
68e6f4c8-6231-4a32-9e8f-f064b1fd4caa
நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் உள்ள ராஜ நாகத்தைப் பார்க்கலாம். அதுமட்டுமல்லாது, ரிவர் வொண்டர்சில் உள்ள பச்சை அனக்கோண்டா, நைட் சஃபாரியில் உள்ள கேவ் ரேசர் மற்றும் கார்ப்பெட் மலைப்பாம்பையும் பார்க்கலாம். - படம்: மண்டாய் வனவிலங்கு காப்பகம்

சீனப் பஞ்சாங்கத்தின்படி இவ்வாண்டின் சீனப் புத்தாண்டன்று (ஜனவரி 29) பாம்பு ஆண்டு பிறக்கிறது.

இதனை முன்னிட்டு, மண்டாய் வனவிலங்கு காப்பகம் சிறப்புத் திட்டம் ஒன்றை ஜனவரி 28ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 12ஆம் தேதி வரை நடத்த இருக்கிறது.

இத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் காணப்படும் பல்வேறு பாம்பினங்களைப் பார்க்கலாம், அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மண்டாய் வனவிலங்கு காப்பகத்துக்குச் சொந்தமான நான்கு பூங்காக்களில் இதுதொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விலங்கியல் தோட்ட அதிகாரிகளின் உரை அவற்றுள் ஒன்று.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் உள்ள ராஜ நாகத்தைப் பார்க்கலாம்.

அதுமட்டுமல்லாது, ரிவர் வொண்டர்சில் உள்ள பச்சை அனக்கோண்டா, நைட் சஃபாரியில் உள்ள கேவ் ரேசர் மற்றும் கார்ப்பெட் மலைப்பாம்பையும் பார்க்கலாம்.

இந்த பாம்புகளுக்கு இரை ஊட்டப்படுவதை விருந்தினர்கள் நேரில் காணலாம்.

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திலும் ரிவர் வொண்டர்சிலும் பாம்புகள் தொடர்பான மின்னிலக்கப் புதிர்ப் போட்டிகள் நடத்தப்படும்.

அதில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.

மண்டாய் பூங்காக்களில் மற்ற திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும்.

சீனப் பாரம்பரிய சிங்க நடனம், அதிர்ஷ்ட தேவதை வலம் வருதல், ராசிப் பலனைத் தெரிவிக்கும் பலகைகள் ஆகியவற்றை விருந்தினர்கள் கண்டு களிக்கலாம்.

குறிப்பிட்ட நாள்களில் மண்டாய் பூங்காக்களுக்குள் நுழையும் முதல் 188 விருந்தினர்களுக்கு மண்டாய் வனவிலங்கு காப்பகத்தின் ராசிப் பலன் தங்க நாணயம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

வைல்ட்பாஸ் மின்னிலக்க உறுப்பினர்களாக இருக்கும் சிங்கப்பூர்வாசிகள் சீனப்புத்தாண்டு விழா காலத்தின்போது மண்டாய் பூங்காக்களுக்குச் செல்லும்போது நுழைவுச்சீட்டுக் கட்டணத்திலிருந்து 20 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.

பிரேண்ட்ஸ் ஆஃப் வைல்ட்லைஃப் சமூகத்தின் உறுப்பினராகச் செலுத்த வேண்டிய தொகையிலிருந்து அவர்களுக்கு 15 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.

அத்துடன் அவர்களுக்கு சிறப்பு வடிவமைப்பைக் கொண்ட சிவப்பு நிற ஹோங்பாவ் உறைகள் தரப்படும்.

குறிப்புச் சொற்கள்