தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிப்ரவரி 20 வரை இரவு வானில் அரிய ‘கோள் அணிவகுப்பு’

1 mins read
27170129-c983-4489-9f25-cd2804026b38
நெப்டியூன், யுரேனஸ் கோள்களைக் காண விரும்புவோருக்கு தொலைநோக்கி தேவை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் ஆகிய ஆறு கோள்கள் இணைந்திருக்கும் ‘கோள் அணிவகுப்பு’ எனப்படும் அரிய வானியல் நிகழ்வு பிப்ரவரி 20ஆம் தேதி வரை இரவு வானத்தில் தெரியும்.

கோள் அணிவகுப்பு என்பது ஒளிமயமான பல கோள்கள் ஒரே நேரத்தில் சுற்று வட்டப்பாதையில் தெரிவதைக் குறிக்கிறது. அறிவியல் நிலைய காணகத்தின்படி (Observatory), வானம் தெளிவாகத் தெரிந்தால், ஆறில் நான்கு கோள்களான சனி, வெள்ளி, வியாழன், செவ்வாய் ஆகியவற்றை சிங்கப்பூரில் எங்கிருந்தும் எந்தக் கருவி இல்லாமலும் பார்க்க முடியும்.

நெப்டியூன், யுரேனஸ் கோள்களைக் காண விரும்புவோருக்கு தொலைநோக்கி தேவை.

தடையின்றி கோள்களைக் காண விரும்புவோர், வானைத் தெளிவாகக் காண முடிகிற திறந்தவெளிக்குச் செல்லும்படி காணகம் பரிந்துரைக்கிறது.

குறிப்புச் சொற்கள்
நிலாதொலைநோக்கிஅணிவகுப்பு