சாங்கி கடற்கரையில் நீந்த மீண்டும் அனுமதி

1 mins read
43bc97ec-723e-4ccd-894c-34bb90738cd3
சாங்கி கடற்கரையில் நீரின் தரம் நன்றாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: தேசியச் சுற்றுப்புற அமைப்பு

சாங்கி கடற்கரையில் இனி வழக்கம்போல நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

தற்போது நீரின் தரம் நன்றாக இருப்பதாகத் தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி ஜோகூரில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதனால் சிங்கப்பூரின் வடகிழக்கு கடற்பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் நீர் விளையாட்டுகளில் ஈடுபடத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது

ஜோகூரில் எண்ணெய்த் தொட்டியிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. லங்சாட் முனையத்தில் உள்ள தொட்டியின் குழாயில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்