தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் துறைமுகத்தின் நிகழ்நேர மெய்நிகர் மாதிரி சோதனையிடப்படும்

2 mins read
675158cf-40f2-4eb2-8fb3-dd526e762d21
துறைமுகத்தின் நிகழ்நேர மெய்நிகர் மாதிரியை அவர் திங்கட்கிழமை (மார்ச் 24) சிங்கப்பூர் கடல்துறை வாரத்தின் திறப்பு விழாவில் அறிமுகப்படுத்தினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் துறைமுகத்தின் நிகழ்நேர மெய்நிகர் மாதிரி இவ்வாண்டின் பிற்பகுதியில் சோதனையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்நேர மெய்நிகர் மாதிரி, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படுகிறது.

கப்பல்கள், துறைமுகச் செயல்பாடுகள், சுற்றுப்புற உணர்கருவிகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் நேரப்படித் தரவுகளை இது ஒருங்கிணைக்கும்.

இது கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்பு, துறைமுகத்தின் இயங்குமுறை, சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் திங்கட்கிழமை (மார்ச் 24) தெரிவித்தது.

சூழ்நிலை விழிப்புணர்வையும் எண்ணெய் மற்றும் ரசாயனக் கசிவு தொடர்பான அவசரநிலை நடவடிக்கைகளையும் நிகழ்நேர மெய்நிகர் மாதிரி மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் கூறியது.

துறைமுகத்தின் நிகழ்நேர மெய்நிகர் மாதிரி பல்வேறு சூழ்நிலைகளை உருவகப்படுத்தும் என்று போக்குவரத்து, சட்ட துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்தார்.

கடலை மாசுப்படுத்தும் திரவங்களைச் சிறு துகள்களாக உடைத்து சிதறடிக்கும் முறையை அது காட்டும் என்றார் அவர்.

துறைமுகத்தின் நிகழ்நேர மெய்நிகர் மாதிரியை அவர் திங்கட்கிழமை (மார்ச் 24) சிங்கப்பூர் கடல்துறை வாரத்தின் திறப்பு விழாவில் அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்வு சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி மையத்தில் நடைபெற்றது.

மெத்தனோல், அமோனியா போன்ற மாற்று எரிபொருளைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான செயல்முறைகளை துறைமுகத்தின் நிகழ்நேர மெய்நிகர் மாதிரி உதவும் என்று திரு முரளி கூறினார்.

கடலின் மேல்பரப்பிற்கு மேல், அடியில், சமமான நிலையில் நம்பகத்தன்மையையும் துறைமுக இயங்குமுறையையும் மேம்படுத்த தேவையான சாதனங்களை உருவாக்க இது உதவும் என்றார் அவர்.

சூழ்நிலை விழிப்புணர்வை மேம்படுத்த துறைமுகத்தின் நிகழ்நேர மெய்நிகர் மாதிரி ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தும் என்று ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்