தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூட்டணியிலிருந்து விலகியது சீர்திருத்தக் கட்சி

1 mins read
இரண்டே கட்சிகள் எஞ்சியுள்ளன
a225fd79-dd51-4168-9a52-a1324b51de0f
கூட்டணியில் மக்கள் குரல் கட்சியும் ஜனநாயக முற்போக்குக் கட்சியுமே எஞ்சியுள்ளன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீர்திருத்த மக்கள் கூட்டணியிலிருந்து சீர்திருத்தக் கட்சி விலகிவிட்டது. 

இதனை அடுத்து, தொடக்கத்தில் நான்கு கட்சிகள் இடம்பெற்றிருந்த அந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் தற்போது இரண்டு கட்சிகளே உள்ளன. 

அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த மக்கள் சக்திக் கட்சி, மே 3ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே, அதாவது கடந்த பிப்ரவரி மாதமே விலகிவிட்டது.  

தற்போது அந்தக் கூட்டணியில் மக்கள் குரல் கட்சியும் ஜனநாயக முற்போக்குக் கட்சியுமே எஞ்சியுள்ளன. 

சீர்திருத்தக்கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம், தமது கட்சியின் விலகலை திங்கட்கிழமை (ஜூலை 7) அறிவித்தார். அந்த விலகல், ஜூலை 7ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும்.

“லிம் டீனின் தலைமைத்துவத்திற்காக நாங்கள் அவருக்கு நன்றி சொல்கிறோம். அவருக்கும் சீர்திருத்த மக்கள் கூட்டணியில் உள்ள கட்சியினருக்கும் எங்கள் நல்வாழ்த்துகளை நல்குகிறோம்,” என்று அவர் கூறினார். 

மறைந்த பழம்பெரும் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஜெ.பி. ஜெயரத்னத்தின் மூத்த மகனான திரு கென்னத் ஜெயரத்னம் அந்தக் கூட்டணியின் தலைவராகத் இருந்தார்.

நிர்வாகம் சார்ந்த காரணத்திற்காகவும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களின் எண்ணிக்கை கூடி, பொதுமக்களிடம் நேரடி தொடர்புகொள்ள அதிக நேர ஒதுக்கீட்டைக் கூடுதலாகப் பெறவேண்டும் என்பதற்காகவும் முன்னதாக தம் கட்சி, இந்தக் கூட்டணியில் இணைந்ததாக அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்