ரகசியக் கும்பலைச் சேர்ந்த 20 வயது ஆடவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தபோதும், 2022க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பலமுறை குற்றம் புரிந்தார்.
குற்றங்களைப் புரிந்தபோது பதின்ம வயதில் இருந்த அவர், தம்மீது சுமத்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகளை புதன்கிழமை (பிப்ரவரி 26) ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க, நீதிமன்ற உத்தரவின்படி அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு கலவரம் செய்தது, உரிமமின்றி ஆபத்தான முறையில் அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது, தம்முடன் காதலி நெருக்கமாக இருப்பதைக் காட்டும் காணொளிகளை டெலிகிராம் பயனர்களிடம் விற்றது உள்ளிட்டவை அக்குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
சீர்திருத்தப் பயிற்சிக்கு உட்படுத்துவதற்கான பொருத்தத்தை ஆராய்வதற்கான அறிக்கையை வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த ஆடவரின் வழக்கு ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.
அந்த ஆடவர் புரிந்த குற்றங்களின் கடுமையைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சீர்திருத்தப் பயிற்சியை நாடியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

