தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுமிகளை பாலியல் சேவையில் ஈடுபடுத்திய பதின்ம வயது இளையருக்கு சீர்திருத்த பயிற்சி

1 mins read
8f6cc7a7-add5-4710-bbb1-8a1191d22b05
படம்: - பிக்சாபே

டெலிகிராம் செயலியில் இரு சிறுமிகளைச் சமூக நிகழ்ச்சிகளில் பாதுகாப்புச் சேவை செய்யும் பணியாளர்களாக விளம்பரப்படுத்தி, இதன்மூலம் அவர்களைப் பாலியல் சேவையில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக பதின்ம வயது இளையருக்குக் குறைந்தது ஆறு மாதச் சீர்திருத்த பயிற்சி தண்டனையாக செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்படும்போது அந்த இளையர் காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார். முன்னதாக ஆள் கடத்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டதின்கீழ் உள்ள குற்றங்கள் உட்பட தன்மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுளை அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

சீர்திருத்த பயிற்சி என்பது நன்னடத்தைக் கண்காணிப்பைவிட மிகவும் கடுமையான தண்டனை என்றும் சீர்திருத்த பயிற்சியைத் தண்டனையாக பெறும் நபரின் பெயர் குற்றவியல் பதிவில் ஏற்றப்படும் எனவும் கூறப்பட்டது.

தண்டனை விதிக்கப்படும் நபர், ஆறு மாதங்களிலிருந்து ஓர் ஆண்டு வரை சீர்திருத்த பயிற்சி நிலையத்தில் மறுவாழ்வு மற்றும் ஆலோசனைகளுக்கு தடுத்து வைக்கப்படுவார்கள்.

குறிப்புச் சொற்கள்