மீண்டும் மீண்டும் குற்றம்; இளம்பெண்ணுக்கு சீர்திருத்தப் பயிற்சித் தண்டனை

1 mins read
384ec1d1-d0d2-4845-9059-1f60c5041906
முதல்முறை குற்றத்தில் ஈடும்போது இளம்பெண்ணின் வயது 17. - கோப்புப் படம்: ஊடகம்

மோசடி மற்றும் திருட்டுக் குற்றங்களுக்கான தண்டனைக்குக் காத்திருக்கும் வேளையில் மீண்டும் திருட்டுக் குற்றம் புரிந்தார் ஒரு பதின்ம வயதுப் பெண்.

2021 செப்டம்பர் மாதம் வங்கிக் கணக்கைத் திறந்த அந்தப் பெண், அந்தக் கணக்கை நிர்வகிக்கும் உரிமையையும் ஏடிஎம் அட்டையையும் தமது முன்னாள் தோழர் ஒருவரிடம் கொடுத்தார்.

தொடர்ந்து 2022 மார்ச் மாதம் சன்டெக் சிட்டியில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் திருடினார்.

அந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை நடைபெற்றபோது 2024 ஆகஸ்ட் மாதம் அவற்றை ஒப்புக்கொண்டார்.

அதற்கான தண்டனை விதிக்கப்படும் முன்னர், அடுத்த மாதமே ஈஸ்ட் கோஸ்ட் ரோடு, காத்தோங் கடைத்தொகுதியில் இருந்த கடை ஒன்றில் $1,000க்கும் அதிகமான பொருள்களை அந்த இளம்பெண் திருடினார்.

முதல்முறை குற்றத்தில் ஈடுபடும்போது அவரின் வயது 17. வயது குறைந்தவர் என்கிற காரணத்தால் அவரைப் பற்றிய விவரங்களை வெளியிட அனுமதி இல்லை.

2024ஆம் ஆண்டு தாம் புரிந்த குற்றங்களை இவ்வாண்டு ஜனவரி மாதம் அவர் ஒப்புக்கொண்டார்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) அவருக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சி, தண்டனையாக விதிக்கப்பட்டது. பின்னர், $15,000 பிணையில் அப்பெண் விடுவிக்கப்பட்டார். ஏப்ரல் 28ஆம் தேதி அவர் தமக்கான தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்