கைச்செலவுக்குக் கொடுக்கப்படும் பணம் தொடர்பாகத் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறுவன், தந்தையைக் கத்தியால் தாக்க முயன்றதுடன் அவரது முகத்தில் குத்தினான்.
அப்போது அந்தச் சிறுவனுக்கு 15 வயது.
கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து, தமது தாய்மாமன் தமக்குப் பணம் தராததால் அச்சிறுவன் கத்தியை அவரது கழுத்தில் வைத்து மிரட்டினான்.
தற்போது அச்சிறுவனுக்கு 17 வயது.
திங்கட்கிழமையன்று (ஜனவரி 5) அவனுக்குச் சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டது.
அதன்படி, அவன் குறைந்தது ஓராண்டுக்குச் சீர்திருத்தப் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
அங்கு அவனுக்குக் கட்டொழுங்கு பயிற்சிகளும் ஆலோசனை சேவையும் வழங்கப்படும்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சிறுவன் ஒப்புக்கொண்டான்.
தொடர்புடைய செய்திகள்
சிறுவனின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அச்சிறுவன் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி கடையிலிருந்து கைப்பேசி ஒன்றைப் பெற்றுக்கொள்ள முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கத்தியைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இத்தகைய குற்றங்கள் 75ஆகப் பதிவாகின.
2024ஆம் ஆண்டின் முற்பாதியில் அது 59ஆக இருந்தது.
2024ஆம் ஆண்டில் கத்தி பயன்படுத்தி நடந்த குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 131.

