தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தஞ்சோங் காத்தோங் கடைத்தொகுதி 2029ஆம் ஆண்டு முழுமையாகச் செயல்படும்

1 mins read
9b7831dd-533d-4cd1-85b9-8df547fdcb18
தஞ்சோங் காத்தோங் கடைத்தொகுதி மறுசீரமைக்கப்புக்குப் பிறகு இப்படி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஜுன் ஜி டெவலப்மண்ட்

கேலாங் சிராய் கலாசாரப் பகுதியில் முக்கிய அங்கமாக உள்ளது தஞ்சோங் காத்தோங் கடைத்தொகுதி. அது தற்போது மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.

மறுசீரமைக்கப்பட்ட தஞ்சோங் காத்தோங் கடைத்தொகுதி 2029ஆம் ஆண்டு முதல் முழுமையாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த இடத்தை மேம்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஜுன் ஜி டெவலப்மண்ட் நிறுவனம் பெற்றது. அது 30 ஆண்டுக் குத்தகையைப் பெற்றுள்ளது.

ஜுன் ஜி நிறுவனம் சாங்கி சிட்டி பாயின்ட், கிராண்டிரல் கடைத்தொகுதி உள்ளிட்டவற்றை நிர்வாகம் செய்யும் த எலிகன்ட் குழுமத்தின் கீழ் செயல்படுகிறது.

குத்தகை தொடர்பான தகவலை சிங்கப்பூர் நில ஆணையம் சனிக்கிழமை (ஜூன் 28) வெளியிட்டது.

“ஜுன் ஜி நிறுவனத்தின் யோசனைகள் சிறப்பாக இருந்தது. அதனால் அதற்குக் குத்தகை வழங்கப்பட்டது. மாடியில் பல பயன்பாட்டுச் சமூக ஒன்றுகூடல் இடம், தோட்டம், கலை, கலாசாரம் சார்ந்த படைப்புகள் உள்ளிட்டவை கடைத்தொகுதியில் இருக்கும்,” என்று சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்தது.

ஜுன் ஜி நிறுவனம் கிட்டத்தட்ட 90 மில்லியன் வெள்ளி செலுத்தி குத்தகையை வென்றது. அந்நிறுவனத்துடன் மேலும் இரு நிறுவனங்கள் போட்டியிட்டன.

குறிப்புச் சொற்கள்