பெரும்பாலான ரயில்களின் நம்பகத்தன்மை ஏப்ரலில் உயர்ந்தது

பெரும்பாலான ரயில்களின் நம்பகத்தன்மை ஏப்ரலில் உயர்ந்தது

2 mins read
3fc4882e-3d60-49ea-959e-d64bc69d648d
ரயில்களின் நம்பகத்தன்மை கடந்த மாதம் அதிகரித்துள்ளது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் ரயில்களின் நம்பகத்தன்மை ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு ரயில்களின் நம்பகத்தன்மை உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு மே முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை தாமதங்களுக்கு இடையே ரயில்கள் சராசரியாக 2.22 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளன.

2024ஆம் ஆண்டு நவம்பருக்குப் பின் முதன்முறையாகத் தாமதங்களுக்கு இடையே பதிவான ரயில் பயணம் 2 மில்லியன் கிலோமீட்டரைக் கடந்தது.

2024ஆம் ஆண்டு நவம்பரில் அந்த எண்ணிக்கை 2.2 மில்லியன் கிலோமீட்டராகப் பதிவானது.

ஐந்து நிமிடங்களுக்குமேல் தாமதம் ஏற்படும்முன் ரயில்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளன என்பதன் அடிப்படையில் நிலப் போக்குவரத்து ஆணையம் ரயில்களின் நம்பகத்தன்மையைக் கணிக்கிறது.

அந்த வகையில் வட்டப் பாதையைத் தவிர பிற பாதைகளில் சென்ற ரயில்களின் நம்பகத்தன்மை அதிகரித்து.

எஸ்பிஎஸ் டிரான்சிட் இயக்கும் வடக்கு - கிழக்கு ரயில் பாதை ஆக நம்பகமான ரயில் பாதையாகத் தொடர்ந்து நீடிக்கிறது. தாமதம் ஏற்படும்முன் அந்தப் பாதையில் ரயில்கள் கடந்த மாதம் கிட்டத்தட்ட 4.45 மில்லியன் கிலோமீட்டர்வரை பயணம் செய்தன. மார்ச் மாதத்திலும் அதே தூரம் பதிவானது.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் டௌன்டவுன் ரயில் பாதை இரண்டாம் இடத்திற்கு வந்தது. தாமத்தை எதிர்கொள்ளும்முன் அந்தப் பாதையில் கிட்டத்தட்ட 4.2 மில்லியன் கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில்கள் பயணம் செய்தன.

மார்ச் மாதம் அந்தப் பாதையில் ரயில்கள் பயணம் செய்த தூரம் 2.1 மில்லியன் கிலோமீட்டர்.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் வட்டப் பாதையின் நம்பகத்தன்மை ஏப்ரல் மாதம் சரிந்தது. தாமதம் ஏற்படும்முன் அந்தப் பாதையில் கிட்டத்தட்ட 2.36 மில்லியன் கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில்கள் பயணம் செய்தன.

மார்ச் மாதம் ரயில்கள் பயணம் செய்த தூரம் 2.37 மில்லியன் கி.மீ..

கிழக்கு - மேற்குப் பாதையில் தாமதங்களுக்குமுன் ரயில்கள் கிட்டத்தட்ட 2.02 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்தன. அதற்குமுன் அது 1.45 கிலோமீட்டராக இருந்தது.

குறிப்புச் சொற்கள்