இஸ்லாமிய வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்ட தொழில்முறையில் இல்லாத மூத்த மருத்துவர் கோ குவாங் போவுக்கு அதிகபட்ச அபராதமான $10,000 விதிக்கப்பட்டது.
85 வயதான அவர், தன்மீது சமய வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்பட்டதற்காகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
2021ஆம் ஆண்டு அக்கருத்தைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுவிட்டு, விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே நாட்டைவிட்டு அவர் வெளியேறியதாகக் கூறப்பட்டது.
அபராதத்தைச் செலுத்த தவறினால் இரு வாரச் சிறைத் தண்டனையை கோ அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது.
சமய வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அவர் ஏன் கருத்து தெரிவித்தார் போன்ற விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படவில்லை.
2022ஆம் ஆண்டு ஜனவரியில் சிங்கப்பூரைவிட்டு சென்ற அவர், 2024ஆம் ஆண்டு அக்டோபரில் நாடு திரும்பியதாகவும் கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

