வாடகை பாக்கி, விலங்குநல அமைப்பு வெளியேறவேண்டும்: ஏவிஎஸ்

1 mins read
0109025a-c42f-4c55-8c5b-90dc0706f988
சுங்கே தெங்காவில் உள்ள தி அனிமல் லாட்ஜுக்குள் காப்பக நாய்கள் நடக்க வைக்கப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விலங்கு நல ஆர்வலர்கள் அமைப்பு (Animal Lovers League) விலங்குகள் காப்பகத்துக்குத் (TAL) தரவேண்டிய 53 மாத வாடகையை இன்னும் தராததால், அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று விலங்குநல மருத்துவச் சேவை (AVS) திங்கட்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்குமேல் வாடகை பாக்கி வைத்ததால் அமைப்பின் குத்தகை காலாவதியாகியுள்ளதாக அறியப்படுகிறது.

மேலும் முறையான பராமரிப்பு இல்லாமல் சில விலங்குகள் நோய்வாய்ப்பட்டிருப்பதையும் விலங்குநல மருத்துவச் சேவை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

சில விலங்குகளை அதிகாரிகள் பராமரிக்கத் தொடங்கியுள்ளனர்.

விலங்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வாடகைக் கட்டணத் திட்டம் ஒன்றை வழங்கி, பயன்படுத்தும் இடங்களைக் குறைத்துக்கொள்ள ஏவிஎஸ் பரிந்துரைத்தும் அவற்றை அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.

விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பு நீண்டநாள்களாகச் சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறது. அது விலங்குகள் காப்பகத்தில் பல இடங்களை வாடகைக்கு எடுத்து விலங்குகளுக்கு சரணாலயம் அமைத்துள்ளது.

தேசிய பூங்காக் கழகத்தின் தலைமையில் இயங்கும் ஏவிஏஸ் பராமரிக்கும் காப்பகத்தில் வாடகைக்கு எடுத்துள்ள இடங்களை விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பு திரும்பத் தரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு விலங்குநல ஆர்வலர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது.

பிறகு 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 200 விலங்குகளுடன் 10 இடங்களை விலங்கியல் காப்பகத்திடம் அது வாடகைக்கு எடுத்தது.

ஆனால் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமைப்பு வாடகை பாக்கி வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்