மின்னியல் சாலைக் கட்டணம் அதிகரிப்புச் செய்திகள் போலியானவை: நிலப் போக்குவரத்து ஆணையம்

1 mins read
0a172fb6-7039-4ecb-910f-3ccfe95ef003
மின்னியல் சாலைக் கட்டணம் தொடர்பாக ஆக அண்மைய தகவல்களைப் பெற நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரபூர்வத் தளங்களை நாடுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூன் மாதத்திலிருந்து மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) அதிகரிக்கப்படும் என்று வலம் வரும் செய்திகள் போலியானவை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (மே 5) தெரிவித்தது.

பிரதான மின்னியல் சாலைக் கட்டண நுழைவாயில்களில், உச்சவேளைகளின்போது கட்டணத் தொகை 50 காசு முதல் $1 வரை ஏற்றம் காணும் என்று சில இணையப்பக்கங்களிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் செய்திகள் வலம் வந்தன.

அவை உண்மையல்ல என்று ஆணையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

ஆக அண்மைய தகவல்களைப் பெற ஆணையத்தின் அதிகாரபூர்வத் தளங்களை நாடுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்