‘கியூ10’ (QOO10) நிறுவனத்தை கலைக்க வேண்டும் என்று கடன்பட்டுள்ள கொரிய நிறுவனம் ஒன்று, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
கொரியாவின் வெகுமதி பற்றுச்சீட்டு வழங்கும் நிறுவனத்துக்கு ஏறக்குறைய 76 பில்லியன் வோன் (S$72.4 மில்லியன்) ‘கியூ10’ கடன் பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தவிர, எஸ்சிஐ இகாமர்ஸ், 21ஸ்ட் செஞ்சுரி ஹெல்த்கேர், மிஸ்டர் மொபைல் டிரேடிங், ஷென்ஷென் லான்மே இண்டஸ்ட்ரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அது $3.26 மில்லியன் கடன் பாக்கி வைத்துள்ளது. இதனால் கடன் வழங்கிய இவை உள்ளிட்ட ஆறு நிறுவனங்களும் கியூ10 நிறுவனத்தைக் கலைக்க ‘கேசிபி’ எனும் கொரிய கல்சர் புரோமேஷன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தென்கொரியாவில் வெகுமதி பற்றுச்சீட்டுகளை விநியோகிக்கும் கேசிபி, ‘கியூ10’ 5.8 பில்லியன் வோன் கடனை திருப்பியடைக்கத் தவறிவிட்டதாகக் கூறியிருக்கிறது.
இதற்கிடையே ‘கியூ10’ நிறுவனம் திருப்பியடைக்காத கடன் பற்றி சிங்கப்பூரிலும் தென்கொரியாவிலும் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.
சோல் மத்திய மாவட்ட தலைமைச் சட்ட அலுவலகத்தில் ‘கியூ10’ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கு யங்-பேயிடம் மோசடி, நிதிக் கையாடல் சந்தேகத்தின்பேரில் விசாரிக்கப்பட்டார்.
சிங்கப்பூர் நாணய ஆணையமும், வர்த்தகர்களுக்கு பாக்கி வைத்திருப்பதால் செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து ‘கியூ10’ பணம் வழங்கும் சேவைகளை நிறுத்திவைத்துள்ளது.
காவல்துறையினரும் நிறுவனங்களுக்கு பணம் வழங்குவது தாமதமானதால் ‘கியூ10’ நிறுவனத்தை விசாரித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் இவையெல்லாம் ஒரு சிறிய விசாரணையே என்று ‘கியூ10’ கூறியுள்ளது.

