தேசியத் தனியார் வாடகை ஓட்டுநர்கள் சங்கத்தினர் கிராப் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராப்பின் போனஸ் திட்டத்தைத் தாமதமாகச் செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜூலை 1ஆம் தேதி முதல் கிராப் ஓட்டுநர்களுக்கான ஊக்கத் திட்டங்கள் மாற்றம் காணவுள்ளது.
ஜூன் 20ஆம் தேதி கிராப் ஓட்டுநர்களுக்கு 2 மணிவாக்கில் கிராப் செயலிமூலம் புதிய தகவல் ஒன்று அனுப்பப்பட்டது.
Streak Zones என்ற திட்டம் அனைத்து ஓட்டுநர்களும் ஏற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டம் 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது.
Streak Zones என்பது வாடகை கார்களுக்குத் தேவை அதிகமாக உள்ள இடங்களில் ஓட்டுநர்கள் தங்களது நேரத்தை இரண்டு மணி ஒதுக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் யாரேனும் வாடகை கார்கள் சேவை வேண்டும் எனப் பதிவு செய்தால் ஓட்டுநர்கள் அதை மறுக்காமல் கட்டாயம் செய்ய வேண்டும்.
இது பெரும்பாலும் உச்ச நேரங்களில் மட்டும் செயல்படுத்தப்படும்.
ஓட்டுநர்கள் ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் 5 விழுக்காடு ரொக்கம் கிடைக்கும். அந்தத் தொகை அடுத்த நாளே ஓட்டுநர்களின் கணக்கில் நிரப்பப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் திட்டத்தால் முழுநேர ஓட்டுநர்களின் ஊதியம் பாதிக்கப்படும் என்று தேசியத் தனியார் வாடகை ஓட்டுநர்கள் சங்கம் அக்கறை தெரிவித்துள்ளது.
மேலும் ஜூலை 1 முதல் போன்ஸ் திட்டத்தில் சில மாற்றங்கள் இடம்பெறுகிறது.
300 முதல் 499 பயணங்கள் மேற்கொள்பவர்களுக்குத் தற்போது குறைந்தது 8 விழுக்காடு பயணத் தொகை வழங்கப்படும். இனி அது குறைந்தது 4 விழுக்காக மாற்றப்படும்.
தற்போது ஓட்டுநர்கள் தங்களது முதல் 300 பயணங்களுக்கான ரொக்க போனஸ் $30, $80, $100 எனத் தங்களது ஊக்கத் திட்டங்களுக்கு ஏற்றவாறு ரொக்கம் பெறுவார்கள்.