செங்ஹுவா பூங்காவிலிருந்து மீட்கப்பட்ட முயல்கள் நலமாக உள்ளன: விலங்குநல அமைப்பு

1 mins read
fa0c00e5-2d7d-46f9-bf9c-789d78868103
புக்கிட் பாஞ்சாங்கில் இருக்கும் செங்ஹுவா இயற்கைப் பூங்காவிலிருந்து குறைந்தது ஆறு முயல்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீட்கப்பட்டன.  - படம்: பன்னி வாண்டர்லேண்ட்

செங்ஹுவா இயற்கைப் பூங்காவிலிருந்து கைவிடப்பட்ட சில முயல்களை விலங்குநல அமைப்பான பன்னி வாண்டர்லேண்ட் (Bunny Wonderland) மீட்டது. தற்போது, அவை நலமாகவும் தத்தெடுப்புக்குத் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டது.

மீட்கப்பட்ட முயல்களில் நான்கு, இன்னும் அந்த அமைப்பின் பராமரிப்பில் இருப்பதாக அது தெரிவித்தது.

ஒன்றிலிருந்து இரண்டு வயதுக்குட்பட்ட அந்த முயல்களை விலங்குநல மருத்துவர்கள் பரிசோதித்தனர் என அது மேலும் கூறியது.

பூங்காவிலிருந்து ஐந்தாவது முயலை மீட்ட அப்பகுதி குடியிருப்பாளர், அதை தன்னுடன் வைத்துகொள்ள விரும்பியதாகவும் அதனால், அவருடைய பராமரிப்பில் அந்த முயல் விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மற்ற முயல்கள் தத்தெடுப்புக்குத் தயாராகி வருகின்றன. பூங்காவில் கைவிடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்ட ஆறாவது முயலைத் தேடும் பணித் தொடர்கிறது.

தேசியப் பூங்காக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு,விலங்கு வதைத் தடுப்பு சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிவிப்புத் தாள்களை பன்னி வாண்டர்லேண்ட் அமைப்பு, செங்ஹுவா இயற்கைப் பூங்கா சுற்றியுள்ள பகுதிகளில் ஜனவரி 10ஆம் தேதி விநியோகித்தது.

அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து கைவிடப்பட்ட முயல்கள் குறித்து எந்தவொரு புதிய புகார்களும் வரவில்லை என அமைப்பு தெரிவித்தது.

புக்கிட் பஞ்சாங்கில் இருக்கும் செங்ஹுவா இயற்கைப் பூங்காவிலிருந்து குறைந்தது ஆறு முயல்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீட்கப்பட்டன. அவற்றில் ஐந்தை பன்னி வாண்டர்லேண்ட் அமைப்பு மீட்டதாகவும் ஒன்றை விலங்கு வதைத் தடுப்பு சங்கம் மீட்டதாகவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்