நாடாளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பின்போது மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட குடியிருப்பாளர்

நாடாளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பின்போது மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட குடியிருப்பாளர்

2 mins read
1da4fdba-3a1e-4513-ab84-c48a891792a3
ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் கியட் ஹாவ். - படம்: டிக்டோக்/டான் கியட் ஹாவ்

பிடோக் வட்டாரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நேரத்தின்போது குடியிருப்பாளர் ஒருவர் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதை அடுத்து, காவல்துறையினர் அவ்விடத்துக்கு அழைக்கப்பட்டதாக ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் கியட் ஹாவ் செப்டம்பர் 17ஆம் தேதியன்று தெரிவித்தார்.

சம்பவம் குறித்து செப்டம்பர் 17ஆம் தேதி அதிகாலை பதிவேற்றம் செய்யப்பட்ட டிக்டாக் காணொளியில் திரு டான் பேசினார்.

ஆனால் அந்தச் சம்பவம் குறித்து அவர் கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் - குடியிருப்பாளர்கள் சந்திப்பானது, குடியிருப்பாளர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் தொடர்ந்து பாதுகாப்பான இடமாக இருக்க, ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது மிகவும் முக்கியம் என்று திரு டான் வலியுறுத்தினார்.

கம்போங் சாய் சீ தொகுதியைத் திரு டான் பிரதிநிதிக்கிறார்.

திங்கட்கிழமை இரவுகளில் புளோக் 408 பிடோக் நார்த் அவென்யூ 2ல் குடியிருப்பாளர்களைத் திரு டான் சந்திப்பது வழக்கம்.

“சில நேரங்களில் மக்கள் சந்திப்பு நேரத்தின்போது சில குடியிருப்பாளர்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதுண்டு.

“மக்கள் சந்திப்பு நேரத்தின்போது என்னை வந்து பார்ப்பவர்கள் சவால்மிக்க காலகட்டத்தை எதிர்நோக்குகின்றனர் என்பது எனக்குப் புரிகிறது. இருப்பினும், சந்திப்புகளுக்கு வரும் அனைத்துக் குடியிருப்பாளர்களும் எங்கள் தொண்டூழியர்களுக்குத் தகுந்த மரியாதை கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் திரு டான்.

“குடியிருப்பாளர்களுக்குத் தங்களால் முடிந்த உதவியை வழங்க தொண்டூழியர்கள் முயற்சி செய்கின்றனர். சில நேரங்களில் சில விவகாரங்ளுக்கு அவர்களால் தீர்வு காண முடியாது. உதாரணத்துக்கு, குடியிருப்பாளருக்கு வேலை கொடுத்தே ஆக வேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியாது. ஆனால் வேலை தேடுவதில் உதவவும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்யவும் எங்களால் உதவி செய்ய முடியும்,” என்று திரு டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்சந்திப்புகாவல்துறை