அடுத்த இரு வாரங்களுக்கு வெப்பமான வானிலை

ஒரு சில நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை தொடலாம்

சிங்கப்பூரில் அடுத்த இரு வாரங்களுக்கு மழை பெய்யும் நாள்கள் குறைவாகவே இருக்கும். வெப்பமான நாள்கள்தான் மிகுந்து இருக்கும். 

அன்றாட வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை ஒட்டியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரு சில நாள்களில் மேகம் குறைந்து வெப்பநிலை 35 டிகிரி செல்சியசை தொடலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் வெளிக்கிழமை (ஜூன் 16) தெரிவித்தது. 

சில நாள்களில் இரவு நேரங்களில்கூட வெப்பம் அதிகமாக, அதாவது 29 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கக்கூடும். 

கடந்த இரு வாரங்களுடன் ஒப்பிடுகையில் அடுத்த இரு வாரங்களுக்கு சராசரி மழை அளவு குறைவாகவே இருக்கும். 

சில நாள்களில் பிற்பகல் நேரத்திலும் அதிகாலை நேரத்திலும் இடியுடன் கூடிய மழை சிறிது நேரம் பெய்யலாம். ஒரு சில நாள்களில் காலைநேரத்திலும் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைத்து இருக்கிறது. 

மொத்தமாகப் பார்க்கையில், இந்த மாதத்தின் இரண்டாவது பாதியில் சராசரி மழை அளவு குறைவாகவே இருக்கும் என்று நிலையம் தெரிவித்துள்ளது. 

இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், ஜூன் 2ஆம் தேதி புலாவ் உபினில் அதிகபட்சமாக 34.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!