2025 கூட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் பிப்ரவரி 4ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
கூட்டு மாணவர் சேர்க்கை இணையப்பக்கம் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.
தொடக்கக் கல்லூரி அல்லது மில்லெனியா கல்விக் கழகத்தில் சேரும் மாணவர்கள் பிப்ரவரி 5ஆம் தேதி காலை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கல்வி அமைச்சு திங்கட்கிழமை (ஜனவரி 27) சொன்னது.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு, பள்ளிக்குச் செல்வது தொடர்பான விவரங்கள் பிப்ரவரி 4ஆம் தேதி மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.
பலதுறைத் தொழில்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு பிப்ரவரி இறுதிக்குள் தகவல் அனுப்பப்படும்.

