ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனை வளர்ச்சி கண்டது

ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனை வளர்ச்சி கண்டது

2 mins read
b688adb9-0ad6-4034-b1d5-48f3093ef9c4
மே மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனை ஒரு விழுக்காடு கூடியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

கடந்த ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.

வலுவாகச் செயல்பட்ட துறைகளில், பொழுதுபோக்குப் பொருள்கள், கடிகாரங்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

சிங்கப்பூர்ப் புள்ளிவிவரத் துறை புதன்கிழமை (ஆகஸ்ட் 5) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் பதிவான 2.9 விழுக்காட்டு அதிகரிப்பைவிட, ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனை வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 4 விழுக்காடு கூடியது.

மோட்டார் வாகனங்கள், அவற்றின் பாகங்கள், உதிரிப் பாகங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, சில்லறை விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 4.1 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது. மே மாதத்தில் அது 3.6 விழுக்காடாகப் பதிவானது.

ஜூன் மாதத்தில், மொத்த சில்லறை விற்பனையின் மதிப்பு $4.2 பில்லியன் என மதிப்பிடப்பட்டது. மொத்த சில்லறை விற்பனையில் 16.4 விழுக்காடு இணையப் பரிவர்த்தனைகளிலிருந்து வந்தன. மே மாதத்தில் பதிவான 15.3 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம்.

பெரும்பாலான சில்லறை வணிகத் துறைகள் ஓராண்டுக்கு முன்னரைக் காட்டிலும் அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளன. முக்கியமாக, விளையாட்டுப் பொருள்களின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக, பொழுதுபோக்குப் பொருள்களின் விற்பனை 11.4 விழுக்காடு கூடியது.

கடிகாரங்கள், ஆபரணங்களின் விற்பனை 10.5 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், கணினி, தொலைத்தொடர்புச் சாதனங்களின் விற்பனை 9.8 விழுக்காடு கூடின.

இதற்கு மாறாக, சில்லறைக் கடைகள் ஆகப் பெரிய சரிவைப் பதிவு செய்துள்ளன. அவற்றின் விற்பனை முந்தைய ஆண்டைவிட 9.5 விழுக்காடு சரிந்துள்ளது. உடைகள், காலணிகளின் விற்பனையும் 1.7 விழுக்காடு இறங்கியது.

உணவு, பானச் சேவைத் துறையின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த ஜூன் மாதத்தில் 2.3 விழுக்காடு சரிந்தது. மே மாதத்தில் அது 0.1 விழுக்காட்டு வளர்ச்சியைக் கண்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்