நவம்பர் மாதத்தில் வீட்டு வாடகை உயர்வு

1 mins read
7a94b6f1-30c5-4491-ab87-b89e43261ec8
நவம்பர் மாதம் 5,010 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டது. அக்டோபர் மாதம் 5,712 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் நவம்பர் மாதம் தனியார் கூட்டுரிமை மற்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் வாடகைகள் அதிகரித்துள்ளன.

எஸ்ஆர்எக்ஸ் (SRX), 99.co ஆகிய சொத்து இணையத்தளங்கள் அதுகுறித்த தகவல்களை வியாழக்கிழமை (டிசம்பர் 19) வெளியிட்டது.

தனியார் கூட்டுரிமை வீடுகளின் வாடகை அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் 0.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தனியார் வீடுகளின் வாடகை தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகரித்துள்ளதாக ஆரஞ்‌ச் டீ குரூப் (OrangeTee Group) நிறுவனத்தின் கிறிஸ்டீன் சுன் தெரிவித்தார்.

“அடுத்த ஆண்டு தனியார் வீட்டு வாடகை இரண்டு முதல் நான்கு விழுக்காடு வரை உயரலாம். பொருளியல் மீண்டு வருவதாலும் வேலைவாய்ப்பு உருவாகுவதாலும் அந்த ஏற்றம் இருக்கும்,” என்று கூறினார்.

“இவ்வாண்டின் முதல் காலாண்டில் வாடகைகள் குறைந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக வாடகைகள் உயர்ந்து வருகிறது. பொருளியல் சாதகமாக இருந்தால் அடுத்த ஆண்டு வாடகை ஏற்றம் காணும்,” என்று 99.co நிறுவனத்தின் லுக்மான் ஹக்கீம் தெரிவித்தார்.

நவம்பர் மாதம் 5,010 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. அக்டோபர் மாதம் 5,712 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்