சிங்கப்பூரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புகைமூட்ட ஆபத்து தொடரலாம்

தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரிக்கை

சிங்கப்பூரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புகைமூட்ட ஆபத்து தொடரலாம்

2 mins read
69d2e0cb-8a47-46e6-8fe8-5c3a55cd4a64
இந்தோனீசியாவின் சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளில் தீவிரமடைந்து வரும் காட்டுத் தீ காரணமாக எழும்பும் அடர்ந்த புகைமூட்டம், அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், ஃபிலிப்பீன்ஸ் வரை பரவி வான்வெளியையும் காற்றின் தரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. - படம்: இபிஏ
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரம் மிதமான நிலையிலிருந்து ஆரோக்கியமற்ற நிலைக்குச் செல்லக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6)வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி,நாட்டின் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு எண் (PSI) 73 முதல் 87 வரை மிதமான அளவில் பதிவானது.

மத்திய பகுதியில் சனிக்கிழமை இரவு 103 என்ற ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருந்த குறியீட்டு எண், ஞாயிறு மாலை 6 மணிக்கு 87 ஆகக் குறைந்தது. மற்றப் பகுதிகளிலும் காற்றின் தரம் வடக்கு, 73, தெற்கு, 74, கிழக்கு, 86, மேற்கு, 83, என மிதமான அளவிலேயே உள்ளது.

காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு எண் 101 முதல் 200 வரை பதிவானால் அது ஆரோக்கியமற்ற நிலையாகக் கருதப்படுகிறது. அந்தச் சமயங்களில் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் வறண்ட, காற்றோட்டமான வானிலை நிலவியதாகத் தெரிவித்த வாரியம், தெற்கு, மத்திய சுமத்ரா, மேற்கு கலிமந்தான் பகுதிகளில் உள்ள காட்டுத் தீயிலிருந்து எழும்பும் அடர்ந்த புகைமூட்டம் சிங்கப்பூரை நோக்கி வருவதாகக் குறிப்பிட்டது.

வரும் நாள்களில் வறண்ட வானிலையுடன் தென்கிழக்கு அல்லது தெற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதால், காட்டுத் தீ நீடித்தால் புகைமூட்டப் பாதிப்பு தொடரும் ஆபத்து உள்ளது.

2023ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கப்பூரில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியிருப்பது இதுவே முதன்முறையாகும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர் அமைச்சரவை 2025புவி, அறிவியல் அமைச்சுகாற்றுத்தரம்தூய்மைக்கேடுபாதிப்புகுறியீடு