சாலை விபத்து; 36 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

சாலை விபத்து; 36 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

1 mins read
1511cdf4-794e-47b7-970d-966fae63eaa4
36 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். - படம்: எஸ்ஜி ரோடு விஜிலான்டே/ ஃபேஸ்புக்
Google News Preferred Icon

சிலேத்தார் விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (மார்ச் 12) மோட்டார்சைக்கிள் டாக்சியுடன் மோதியதைத் தொடர்ந்து மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச்செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் நடந்த அந்த விபத்து குறித்துத் தங்களுக்கு அந்நாளில் அதிகாலை ஒரு மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

மருத்துவ உதவி அதிகாரி ஒருவர், 36 வயதான அந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநரின் மரணத்தைச் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்தார். 70 வயது டாக்சி ஓட்டுநர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அப்போது, அவர் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

மேல்விவரங்கள் அறிய, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் ‘கம்ஃபர்ட்டெல்குரோ’ நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

‘எஸ்ஜி ரோடு விஜிலான்டே’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில், எச்சரிக்கை விளக்கு எரிந்துகொண்டிருந்த நிலையில், அந்த டாக்சி சாலையின் நடுவில் இருப்பதைக் காணமுடிந்தது.

மற்றொரு காணொளியில், டாக்சி சேதமடைந்திருந்ததையும் அதன் அருகில் மோட்டார்சைக்கிள் இருந்ததையும் பார்க்கமுடிந்தது.

டாக்சியின் பின்பக்கக் கண்ணாடியில் ரத்தம் இருப்பது போல் காட்டும் புகைப்படமும் வெளியிடப்பட்டது.

கடந்த 2025ஆம் ஆண்டில், போக்குவரத்து மரணங்களின் எண்ணிக்கை பத்தாண்டுகள் இல்லாத அளவில் 149ஆகப் பதிவானது. கடந்த 2016ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 141ஆக இருந்ததாகப் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
சாலை விபத்துமரணம்மோட்டார்சைக்கிள்டாக்சி