அங் மோ கியோ வட்டாரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 59 வயது நடையர் மாண்டார். விபத்து தொடர்பாக 50 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து திங்கட்கிழமை (ஜனவரி 19) இரவு நிகழ்ந்தது.
அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள புளோக் 231ல் கார் ஒன்று விபத்துக்குள்ளானதாகத் தங்களுக்கு இரவு 8.30 மணி வாக்கில் தகவல் வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
விபத்தில் நடையர் ஒருவர் சிக்கினார் என்றும் அவர் உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் காயம் காரணமாக நடையர் மாண்டார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணம் ஏற்படுத்தியதற்காக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
விபத்து தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

