பீச் ரோடு ஹோட்டலில் கொள்ளை: 12 மணி நேரத்தில் பிடிபட்ட ஆடவர்

பீச் ரோடு ஹோட்டலில் கொள்ளை: 12 மணி நேரத்தில் பிடிபட்ட ஆடவர்

படம்: பிக்சாபே

21 Sep 2026 - 7:29 pm

1 mins read

பீச் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலின் அறையில் புகுந்து பொருள்களைத் திருடிய குற்றத்திற்காக 29 வயது ஆடவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) மாலை கைது செய்யப்பட்டார்.

திங்கட்கிழமை காலை 7.30 மணி அளவில், அந்த ஹோட்டல் அறையிலிருந்து ஏறக்குறைய 150 வெள்ளி ரொக்கம் திருடப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்டது என்று காவல்துறை கூறியது.

காவற்படையின் மத்தியப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகள் மூலமும் கண்காணிப்பு கேமராப் பதிவுகளின் உதவியோடும் புகாரளிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள் அந்த ஆடவரை அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.

வசிப்பிடத்தில் புகுந்து திருடியதாக அந்த ஆடவர்மீது செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

பொதுமக்கள் தங்களின் ரொக்கம், அடையாள ஆவணங்கள், பிற விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்களையோ நடவடிக்கைகளையோ கண்டால் உடனடியாக ஹோட்டல் ஊழியர்களிடமும் காவல்துறையிடமும் தெரிவிக்குமாறும் அது அறிவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்
ஹோட்டல்கொள்ளைபுகார்கைதுகாவல்துறை