ரெட்ஹில் பகுதியில் முதியவரிடம் வழிப்பறிக் கொள்ளை: இருவர் கைது

1 mins read
4ecbf356-2c8a-4773-9dfe-1b735eb0c318
இரு சந்தேக நபர்களும் வழிப்பறிக் கொள்ளைக் குற்றத்துக்காக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

ரெட்ஹில் குளோஸ் பகுதியில் ஒரு முதியவரிடம் இருந்த ஒரு பையைப் பறித்துச் சென்ற குற்றத்துக்கு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை வியாழக்கிழமை (டிசம்பர் 25) தெரிவித்துள்ளது.

புதன்கிழமை (டிசம்பர் 24) பகல் 2.50 மணிக்கு ரெட்ஹில்லில் உதவிகேட்டு அழைப்பு வந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது.

ஒரு முதியவர் வைத்திருந்த நெகிழிப் (பிளாஸ்டிக்) பையில் பணம் இருந்ததாகவும் அதனை ஓர் ஆடவர் பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் தொலைபேசி அழைப்பில் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் நான்கு மணிநேரத்தில் அந்த 20 வயது ஆடவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆடவருக்கு உதவியாக இருந்த 17 வயது இளையர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து  $1,625 ரொக்கம் மீட்கப்பட்டது என்று காவல்துறை தெரிவித்தது.

இரு சந்தேக நபர்கள் மீதும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) நீதிமன்றத்தில் வழிப்பறிக்கொள்ளைக் குற்றம் சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஓராண்டு முதல் ஏழு ஆண்டுகள் சிறையும் பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்படும்.

இவைபோன்ற சம்பவங்களை பொதுமக்கள் எதிர்கொள்ள நேர்ந்தால், அமைதியாக இருந்து கொள்ளையர்களின் அங்க, உடை அடையாளங்களையும் தனிப்பட்ட தோற்ற அமைப்புகளையும் மனதில் வைத்துக்கொண்டு உடனே காவல்துறையை தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்