ஃபிரேசர்ஸ் புரோபர்ட்டியின் ராபர்ட்சன் வாக் ஹோட்டல் எதிர்காலத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு 348 அடுக்குமாடி ஆடம்பர வீடுகளாக மாறவிருக்கிறது.
ஃபிரேசர்ஸ் புரோபர்ட்டியும் ஜப்பானிய கட்டுமான நிறுவனமான செக்கிசுய் ஹவுசும் இணைந்து இந்தக் கட்டடத்தை கட்டவிருக்கின்றன. இதற்காக 51:49 என்ற விகிதத்தில் இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் போட்டுள்ளன. ராபர்ட்சன் வாக்கில் உள்ள வர்த்தக வட்டாரத்தையும் சேர்த்து புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
கட்டுமானம் 2025ஆம் ஆண்டில் தொடங்கி 2028ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிரேசர்ஸ் புரோபர்ட்டி திங்கட்கிழமை (நவம்பர் 18) அன்று இந்த விவரங்களை வெளியிட்டது.
999 குத்தகைக் காலத்தைக் கொண்ட புதிய இடம் மொத்தம் 30,664 சதுர மீட்டர் தரைத் தளத்தைக் கொண்டிருக்கும்.
மேலும் 348 ஆடம்பர குடியிருப்பு வீடுகளுடன் உணவகம், பொழுதுபோக்குக்கான இடங்கள் ஆகியவை கலந்து கட்டப்படும். இதன் அடிப்படைடியல் 26,371 சதுர மீட்டர் பரப்பளவில் வீடுகளும் 4,293 சதுர மீட்டர் பரப்பளவில் சில்லறை விற்பனைக் கடைகளும் இருக்கும்.
ராபர்ட்சன் கீ, கிளார்க் கீ, போட் கீ ஆகியவற்றை உள்ளடக்கிய சிங்கப்பூர் ஆறு திட்டத்திற்கு புத்துயீருட்டும் அரசாங்க திட்டத்தையொட்டி புதிய கட்டடம் எழுப்பப்படுகிறது என்று ஃபிரேசர்ஸ் புரோபர்ட்டி அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
இந்தக் குழுமம், 2025ஆம் ஆண்டு மே 31ம் வரை ராபர்ட்சன் வாக் மற்றும் ஃபிரேசர்ஸ் பிளேஸ் வாக் ஆகிய இரண்டையும் கூட்டாக நிர்வகிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த அறிவிப்புக்குப் பிறகு நவம்பர் 18ஆம் தேதி காலை ஃபிரேசர்ஸ் புரோபர்ட்டியின் பங்குகளின் விலையில் (92 காசுகள்) எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

