தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜாலான் தெனாகா வீவக வீடுகளின் மேற்கூரை விரிசல் சரி செய்யப்படும்: பிரித்தம் சிங்

1 mins read
2740ef49-943a-4d28-bd3d-ee1d9c2d0891
பீடோக்கில் ஜாலான் தெனாகா குடியிருப்புப் பேட்டையில் உயர் மாடியில் உள்ள சில வீடுகளின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டிருந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிடோக், ஜாலான் தெனாகாவில் உள்ள சில புளோக்குகளின் வீடுகளில் ஏற்பட்டுள்ள மேற்கூரை விரிசலை அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் சரி செய்யும் என்று பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார்.

அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவர், இதன் தொடர்பில் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பரில் மேற்கூரை விரிசலை சரி செய்வதற்கான வேலை தொடங்குவதற்கு முன்பே குடியிருப்பாளர்களிடமிருந்து ஏழு புகார்களும் பிறகு ஐந்து புகார்களும் வந்ததாக அவர் கூறினார்.

இவ்விவகாரத்தை சீர் செய்ய ஒப்பந்ததாரருடன் நகர மன்றம் இணைந்து செயல்பட்டு வருகிறது. குடியிருப்பாளர்கள் தங்களுடைய வீட்டின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டிருந்தால் நகர மன்றத்திடம் தெரிவிக்கவும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வீவக பேட்டைகளில் பொதுச் சொத்துகளைப் பராமரிக்கும் பொறுப்பு நகர மன்றங்களுக்கு உண்டு. பொதுவீடுகளில் உள்ள மேற்கூரையும் இவற்றில் அடக்கம்.

பிடோக் ரிசர்வோயர் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் குறைந்தது நான்கு குடியிருப்பாளர்கள் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டிருந்ததைக் கண்டுபிடித்ததாக டிசம்பர் 13ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.

இதையடுத்து 1992க்கும் 1993க்கும் இடையில் கட்டப்பட்ட புளோக்குகளின் கட்டமைப்பு குறித்து குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

மேற்கூரையை சீரமைக்கும் பணி 17 புளோக்குகளில் தொடங்கப்பட்டது. இத்தகைய பணிகளில் மேற்கூரையின் மேற்பரப்பு இடிக்கப்பட்டு தண்ணீர் புகாத மேற்கூரை போடப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்