விதிமுறை மீறல்: ஈசூனில் மூன்று தனிநபர் நடமாட்டச் சாதனம் பறிமுதல்

விதிமுறை மீறல்: ஈசூனில் மூன்று தனிநபர் நடமாட்டச் சாதனம் பறிமுதல்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Aug 2026 - 7:35 pm

1 mins read

ஈசூன் நார்த் பாயிண்ட் சிட்டி பகுதியில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) இரவு நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, வேக வரம்பை மீறியும் விதிமுறைகளுக்குப் புறம்பாகவும் பயன்படுத்தப்பட்ட மூன்று தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றில், பணிப்பெண் ஒருவர் தமது முதலாளியின் குழந்தையை ஏற்றிச் சென்ற தனிநபர் நடமாட்டச் சாதனமும் அடங்கும். மணிக்கு 10 கிலோமீட்டர் வேக வரம்பு கொண்ட அந்தச் சாதனம், மணிக்கு 39.69 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டதும் இருவர் அமரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

புதிய விதிமுறைகளின்படி, தகுந்த மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பவர் அல்லது 70 வயதும் தற்கும் மேற்பட்ட வயதுடைய ஒருவர் மட்டுமே இச்சாதனத்தைப் பயன்படுத்த முடியும்.

இச்சோதனையின்போது, அனுமதிக்கப்பட்ட 25 கிலோமீட்டர் வேக வரம்பை மீறி, மணிக்கு ஏறத்தாழ 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் பொருத்தப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனம் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மின்திறன் உதவி மிதிவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளைப் பயனாளர்கள் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யவும் பாதசாரிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தவுமே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்