கோல்ஃப் திடலில் இரண்டாவது தளத்திலிருந்து கீழே விழுந்தது கோல்ஃப் வாகனம்

கோல்ஃப் திடலில் இரண்டாவது தளத்திலிருந்து கீழே விழுந்தது கோல்ஃப் வாகனம்

1 mins read
207af599-3368-4c51-98d6-1d9e3b60773b
கோல்ஃப் விளையாடத் தயாரான இருவருக்கு அருகே இந்த வாகனம் விழுந்ததில் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். - படம்: டிக்டாக்

கெப்பல் கிளப் கோல்ஃப் திடலின் இரண்டாவது தளத்திலிருந்து கோல்ஃப் வாகனம் ஒன்று வியாழக்கிழமை (ஜூ 20) கீழே விழுந்தது.

அங்கு கோல்ஃப் விளையாடத் தயாரான இருவருக்கு அருகே அந்த வாகனம் விழுந்ததில் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

View post on TikTok

நல்ல வேளையாக இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கெப்பல் கிளப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியது.

அந்த ஆடவர்களில் ஒருவரிடம் இருந்து சில மீட்டர் தூரத்தில் புள்வெளியில் அந்த ஓட்டுநரில்லா கோல்ஃப் வாகனம் விழுந்தது.

வியாழக்கிழமை காலை இச்சம்பவம் நிகழ்ந்ததாக கெப்பல் கிளப் தெரிவித்தது.

“எங்கள் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறோம். இச்சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது,” என்று அது கூறியது.

கோல்ஃப் திடலில் கவனத்துடன் இருக்குமாறு கோல்ஃப் விளையாடுவோருக்கு மன்றம் நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்