வாடிக்கையாளர்கள் தொடர்பில் முறையான சோதனைகளை மேற்கொள்ளாமல் சூதாட்டக்கூட விதிமுறைகளை மீறியதற்காக ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவுக்கு கடந்த நிதியாண்டில் மொத்தம் $95,000 அபராதம் விதிக்கப்பட்டது.
2022 ஏப்ரல் மாதத்திற்கும் 2023 மார்ச் மாதத்திற்கும் இடையே, வாடிக்கையாளர்கள் தொடர்பில் முறையான சோதனையை மேற்கொள்ளாததற்கு அந்த ஒருங்கிணைந்த உல்லாசத் தலத்திற்கு $20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், வாடிக்கையாளர்கள் தொடர்பில் கூடுதல் சோதனையை நடத்தத் தவறியதற்காகவும் அதற்கு $75,000 அபராதம் விதிக்கப்பட்டதாக சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் கூறியது.
இதனிடையே, சிலோன் விளையாட்டு மன்றத்தின் உரிமத்தையும் ஒரு மாதத்திற்குத் தற்காலிகமாக ரத்துசெய்திருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
வருகையாளர்களைச் சோதிப்பது, பதிவுசெய்வது, அனுமதி இல்லாதவர்களைச் சூதாட்டக் கூடத்திற்குள் அனுமதித்தது ஆகியவை தொடர்பிலான தகுதிவிதிகளுக்கு மன்றம் இணங்கத் தவறியதே அதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.