தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்கூட் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு; 3 மணி நேரம் தாமதம்

1 mins read
59d6fb0c-c44b-4888-aabc-0cb62a9d4ad2
படம்: குமார் -

தாய்லாந்தின் பேங்காக் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக மீண்டும் பேங்காக்கிற்குத் திரும்பியது.

சம்பவம் திங்கட்கிழமை (மே 8) பிற்பகல் நடந்தது.

விமானம் சிங்கப்பூர் நேரப்படி மாலை 4:56க்கு பேங்காக்கில் இருந்து புறப்பட்டு இரவு 7:15 மணிக்கு சிங்கப்பூர் வரவிருந்தது.

ஆனால் விமானத்தின் குளுரூட்டியில் கோளாறு ஏற்பட்டதால் அதில் இருந்த நீர் ஆவிகள் புகைபோல் விமானத்திற்குள் பரவின.

அது தொழில்நுட்பக்கோளாறு அல்ல என்றாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் மீண்டும் பேங்காக் திருப்பி அனுப்பப்பட்டதாக ஸ்கூட் பேச்சாளர் தெரிவித்தார்.

விமானத்தில் 230 பயணிகளும் 8 சிப்பந்திகளும் இருந்தனர்.

கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் இரவு 7:27 மணிக்கு பேங்காக்கில் இருந்து புறப்பட்டு இரவு 10:26 மணிக்கு சிங்கப்பூர் வந்தது.

குறிப்புச் சொற்கள்