பாலித்தீவில் பூனையைத் திருடி கொன்ற சந்தேகத்தில் சிங்கப்பூரில் பதிவு செய்த தாதி மீது இந்தோனீசிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடவர் ஜூன் மாதம், உத்தம வில்லா துலம்பென் என்ற உல்லாசத்தளத்தில் தங்கியிருந்தபோது குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து சிங்கப்பூரிடமும் அந்நாட்டு அதிகாரிகள் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
பிறந்து ஆறு வாரமே ஆன அப்பூனை ஜூன் 6ஆம் தேதி ஒரு பிளாஸ்டிக் பையில் மாண்டு கிடந்தது, பூனையின் கழுத்து ஒரு கயிற்றால் நெரிக்கப்பட்டிருந்ததாக உல்லாசத்தளம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
பிளாஸ்டிக் பை சிங்கப்பூரில் செயல்படும் பிரைம் பேரங்காடியில் கொடுக்கப்படும் பை. அந்த பேரங்காடி இந்தோனீசியாவில் இல்லை.
ஆடவர் பூனையை கூண்டில் இருந்து எடுப்பது உல்லாசத்தளத்தில் உள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளது. இருப்பினும் அவர் பூனையை கொல்லும் எந்த பதிவுகளும் கேமராக்களில் இல்லை.
பூனை தப்பியோட முயன்றதால் அதைப் பிடித்ததாக அவர் கூறினார்.
சந்தேக நபர் செங்காக் பொது மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளார். இப்போது அவர் எங்கு பணிபுரிகிறார் என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் இல்லை.