சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் பொருள் வாங்குவதால் இங்குள்ள கடைகளுக்கு நெருக்குதல்

சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் பொருள் வாங்குவதால் இங்குள்ள கடைகளுக்கு நெருக்குதல்

1 mins read
697a93c8-73aa-43f7-a182-373fd13699ea
வாரயிறுதிகளில் அல்லது பொது விடுமுறைகளில் ஜோகூர் பாருவுக்குச் செல்ல விரும்பும் சிங்கப்பூரர்கள், இங்குள்ள செலவில் ஒரு பகுதியில் பொருள் வாங்குகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்ளூர்வாசிகள் கூடுதலானோர் வெளிநாடுகளில் பணத்தைச் செலவு செய்ய விரும்புவதால் சிங்கப்பூரின் சில்லறை விற்பனைத் துறைக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

வலுவான சிங்கப்பூர் நாணயம், பொருள் சேவை விலையுயர்வு, கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு வெளிநாட்டுப் பயணத் திட்டங்கள் மீண்டும் தொடங்கியிருப்பது இதற்குக் காரணம்.

ஏப்ரல் மாதத்தில் விற்பனை நிலவரம் சாதகமாக இல்லை என்று சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர் சங்கம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு கூடியிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அது சொன்னது.

விலைவாசி உயர்வை எதிர்கொள்ள, மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பை சிங்கப்பூர் வலுவடையச் செய்துள்ளது.

“சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு அதிகரித்திருப்பதும் வெளிநாடுகளுக்கு சிங்கப்பூரர்கள் பயணம் செய்ய விரும்புவதாலும் மலேசியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் மலிவு விலையில் பொருள், சேவைகளைப் பயனீட்டாளர்கள் நாடுகின்றனர்,” என்று சங்கம் விவரித்தது.

வாரயிறுதிகளில் அல்லது பொது விடுமுறைகளில் ஜோகூர் பாருவுக்குச் செல்ல விரும்பும் சிங்கப்பூரர்கள், இங்குள்ள செலவில் ஒரு பகுதியில் பொருள், சேவைகளைப் பெறுவதை சங்கம் சுட்டியது.

உதாரணமாக, ஒரு முழு ‘மெனிக்யூர், பெடிக்யூர்’ கை, கால்விரல்களின் பராமரிப்புக்கான விலை ஜோகூரில் $35 ஆகும். ஒப்புநோக்க, இது சிங்கப்பூரில் $80க்கும் $120க்கும் இடைப்பட்டிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்