தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய மோசடிகளின் தொடர்பில் கவனம் தேவை

1 mins read
06fb28b1-f4ae-4ab6-8522-25f42bb7b4db
மோசடிக்காரர்கள் போலி சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கலாம் அல்லது அதிகாரபூர்வ இணையத்தளங்களைப் போல் இருக்கும் போலி இணையத்தளங்களைப் பரப்பலாம் என்று இணையப் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடிகள், இணையத் தாக்குதல்களின் தொடர்பில் கவனமாக இருக்குமாறு இணையப் பாதுகாப்பு அமைப்பு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தகைய மோசடிகளால் வாக்காளர்கள் ஏமாந்து தீங்குநிரலைப் பதிவிறக்கம் செய்யக்கூடும்.

அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், ஆலோசனை அறிக்கை ஒன்றின் வழியாக இணையப் பாதுகாப்பு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

இணையப் பிரசாரக் கூட்டங்கள், சமூக ஊடகம் போன்ற தேர்தல் பிரசாரத்திற்கான மின்னிலக்கப் பயன்பாடுகளின் மூலம் அத்தகைய மிரட்டல்கள் வரலாம் என்று அமைப்பு கூறியது.

மோசடிக்காரர்கள் போலி சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கலாம் அல்லது அதிகாரபூர்வ இணையத்தளங்களைப் போல் இருக்கும் போலி இணையத்தளங்களைப் பரப்பலாம் என்று அமைப்பு எச்சரித்தது.

அத்தகைய இணையத் தாக்குதல்களின்போது சந்தேகம் எழாதவர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களைக் கொடுக்கக்கூடும் அல்லது நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்யக்கூடும்.

தீங்குநிரலைப் பதிவிறக்கம் செய்யுமாறு மோசடிக்காரர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளலாம். அவை தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்படும் உண்மையான மென்பொருள் என்று அவர்கள் கூறலாம். தேர்தல் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை நடத்துவதற்குப் பயன்படுத்தும் காணொளிச் செயலிகளும் அவற்றில் அடங்கலாம் என்று இணையப் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டது.

இதுவரை அத்தகைய மோசடிகளின் தொடர்பில் எவ்விதப் புகாரும் வரவில்லை என்றும் அவ்வமைப்பு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்