பிலிப்பீன்ஸ் உல்லாசத் தலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கப்பூரர்

பிலிப்பீன்ஸ் உல்லாசத் தலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கப்பூரர்

1 mins read
ff271617-d57e-42d6-bebe-ccebddc3eb8b
படம்: சமூகஊடகம் -

சிங்கப்பூரரான வர்த்தகர் சான் கிம் டே, கடந்த திங்கட்கிழமை பிலிப்பீன்சில் உள்ள லியான் எனும் உல்லாசத் தலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 66.

திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் மளிகைக் கடை ஒன்றில் இருந்து வெளியேறிய அவரை அடையாளம் தெரியாத நபர் தலையில் சுட்டதாகத் தெரிகிறது.

துப்பாக்கிக்காரரை அடையாளம் காண பிலிப்பீன்ஸ் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

பிலிப்பீன்சைச் சேர்ந்த மரிஃப் எனும் பெண்ணை மணந்த திரு டே அங்கு 30 ஆண்டுகளாக வசித்து வந்தார்.