இம்மாதம் 10ஆம் தேதியன்று பணிநீக்கம் செய்யப்பட்ட மீடியாகார்ப் ஊழியர், பிறரது உறுப்புகளை விருப்பத்துடன் நோக்கியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 ஸ்டார்ஸ் அவென்யூவில் அக்குற்றம் புரியப்பட்டதாகத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை புதன்கிழமை (ஜூன் 11) தெரிவித்தது.
அதுதொடர்பாக 28 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீடியாகார்ப் வளாகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் அந்த ஆடவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்றும் தற்போதைக்குக் கூடுதல் விவரங்கள் வெளியிட முடியாது என்றும் மீடியாகார்ப்பின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
காவல்துறை விசாரணை நடைபெறுகிறது.