ராணுவ வீரர் பயிற்சிக்குப் பிறகு மரணம்

சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர் கிராஞ்சி ராணுவ முகாமில் தமது சொந்த உடற்பயிற்சிக்குப் பிறகு இன்று (பிப்ரவரி 26) உயிர் இழந்தார்.

தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அந்த 39 வயது ஆண் படை வீரர் பயிற்சிக்கு பிறகு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் காலை 8.30 மணிக்கு அம்முகாமின் மருத்துவ நிலையத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டார்.

சுய நினைவுடன் இருந்த அவ்வீரர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு காலை 8.50 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டார்.

போகும் வழியில் மாரடைப்பு அவரை தாக்கிட, அவரை காப்பாற்றும் முயற்சிகள் அந்நேரமே செயல்படுத்தப்பட்டது.

அவசர மருத்துவ வண்டி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையை காலை 9.10 மணிக்கு சென்றடைந்தது.

பிறகு அவர் காலை 10.58 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் தங்களது இரங்கலை குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி வருகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

கண்டுபிடிக்க இன்னும் நிறைய இருக்கிறது

Before you head off, have you checked out these hot stories yet?.