ராணுவ வீரர் பயிற்சிக்குப் பிறகு மரணம்

ராணுவ வீரர் பயிற்சிக்குப் பிறகு மரணம்

1 mins read
9aaba34f-aa77-47d1-bbbb-399835f0152c
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு போகும் வழியில் ராணுவ வீரருக்கு மாரடைப்பு தாக்கியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர் கிராஞ்சி ராணுவ முகாமில் தமது சொந்த உடற்பயிற்சிக்குப் பிறகு இன்று (பிப்ரவரி 26) உயிர் இழந்தார்.

தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அந்த 39 வயது ஆண் படை வீரர் பயிற்சிக்கு பிறகு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் காலை 8.30 மணிக்கு அம்முகாமின் மருத்துவ நிலையத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டார்.

சுய நினைவுடன் இருந்த அவ்வீரர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு காலை 8.50 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டார்.

போகும் வழியில் மாரடைப்பு அவரை தாக்கிட, அவரை காப்பாற்றும் முயற்சிகள் அந்நேரமே செயல்படுத்தப்பட்டது.

அவசர மருத்துவ வண்டி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையை காலை 9.10 மணிக்கு சென்றடைந்தது.

பிறகு அவர் காலை 10.58 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் தங்களது இரங்கலை குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி வருகின்றன.