அதிபர், நாடாளுமன்ற நாயகர், துணை நாயகர்க்குச் சம்பள உயர்வு

அதிபர், நாடாளுமன்ற நாயகர், துணை நாயகர்க்குச் சம்பள உயர்வு

1 mins read
b86fbf0f-1596-495d-9c88-c702e04fab67
பொதுச் சேவைகளுக்கான் ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

சிங்கப்பூர் அதிபர், நாடாளுமன்ற நாயகர், துணை நாயகர் ஆகியோர்க்கான சம்பள உயர்வு அக்டோபர் 15ஆம் தேதியிலிருந்து நடப்பிற்கு வரும் என்று பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்களுக்கான சம்பள விகிதம் தொடர்பில் இப்போதுள்ள அணுகுமுறையையே தொடர மறுஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

பிரதமரின் மாதச் சம்பளத்தின் அடிப்படையில் அதிபரின் மாதச் சம்பளம் முடிவுசெய்யப்படும். ‘எம்ஆர்4’ நிலை அமைச்சரின் குறியீட்டுச் சம்பளத்தைப்போல 50% சம்பளம் நாடாளுமன்ற நாயகர்க்கு வழங்கப்படும். நாடாளுமன்ற நாயகர்க்கான சம்பளத்தைப்போல் 15 விழுக்காடு நாடாளுமன்றத் துணை நாயகர்க்குச் சம்பளமாக வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்