அரசியல் பதவி வகிப்போர், எம்.பி.க்களுக்கான சம்பளக் கட்டமைப்புக் குழுவின் பரிந்துரைகள் ஏற்பு

அரசியல் பதவி வகிப்போர், எம்.பி.க்களுக்கான சம்பளக் கட்டமைப்புக் குழுவின் பரிந்துரைகள் ஏற்பு

1 mins read
9b007280-17be-46c0-906d-8e91019a84e1
பிரதமர் லாரன்ஸ் வோங். - கோப்புப்படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளக் கட்டமைப்பு தொடர்பில் தன்னிச்சையான குழு முன்மொழிந்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

அதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், சம்பளக் கட்டமைப்பு ஒன்றும் புதிதன்று எனக் குறிப்பிட்டார்.

ஆயினும், அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளத்தை உடனடியாக ஒரே தவணையில் அரசாங்கம் உயர்த்தாது என்று அவர் கூறினார்.

பெரும்பாலான குடிமக்கள் ஈட்டுவதைவிட அரசியல் பதவி வகிப்போர் அதிகச் சம்பளம் பெறுவதால் அது ஒரு கடினமான, உணர்வுபூர்வமான விஷயம் என்று திரு லீ குறிப்பிட்டார்.

ஆயினும், அமைச்சர்களின் சம்பளம் குறித்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதைத் தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பிரதமர் வோங்சம்பளம்அமைச்சர்நாடாளுமன்ற உறுப்பினர்