சிங்கப்பூரில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும் ‘சேல்ஸ்ஃபோர்ஸ்’

2 mins read
f4f6094d-6848-4777-8a3a-ed01c0a95792
சிங்கப்பூரில் உள்ள தனது அலுவலகத்தை சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் மேம்படுத்த இருக்கிறது. அதன்மூலம் ஏஜென்ஃபோர்ஸ் மென்பொருளை இயக்கவும் திட்டங்கள் மேம்படுத்தவும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் புதன்கிழமை (மார்ச் 12) அறிவித்தது.

சிங்கப்பூரில் உள்ள தனது ஆய்வு மையம் மூலம் புத்தாக்கத்தை மேம்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அது கூறியது.

சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம், 2019ஆம் ஆண்டில் அதன் முதல் வெளிநாட்டு ஆய்வு மையத்தை நிறுவியது.

வட்டார நாடுகளில் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூரில் உள்ள ‘சேல்ஸ்ஃபோர்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வு நிலையத்தின் வாயிலாக இதற்கு ஆதரவு வழங்கவும் ‘ஏஜென்ஃபோர்ஸ்’ எனும் மென்பொருளின் புத்தாக்கத்தை மேம்படுத்தவும் இந்த முதலீடு இலக்கு கொண்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவை போன்ற பணிகளைச் செய்ய தன்னிச்சையான செயற்கை நுண்ணறிவு முகவர்களை ஏஜென்ஃபோர்ஸ் மென்பொருள் மூலம் வழங்கப்படுகிறது.

ஏஜென்ஃபோர்ஸ் நிறுவனத்தின் புத்தாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் சிங்கப்பூர் முக்கிய சந்தையாகத் திகழ்கிறது என்று சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் உள்ள தனது அலுவலகத்தை சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் மேம்படுத்த இருக்கிறது.

அதன்மூலம் ஏஜென்ஃபோர்ஸ் மென்பொருளை இயக்கவும் திட்டங்கள் மேம்படுத்தவும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவும் அதன் புத்தாக்கத்துக்கும் மையம் ஒன்றை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்த முதலீடு பெரிதும் கைகொடுக்கும் என்று சிங்கப்பூர் பொருளியல் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜெர்மேன் லோய் தெரிவித்தார்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள தனது செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையத்தில் விமானத்துறைக்கான தீர்வுகளை மேம்படுத்த சிங்கப்பூர் ஏர்லைன்சுடன் சேல்ஸ்ஃபோர்ஸ் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்