சிங்கப்பூரில் 1950களில் முற்றாக அழிந்துவிட்ட என நம்பப்படும் சம்பார் மான்கள் மீண்டும் தீவின் சில இடங்களில் தோன்ற தொடங்கியுள்ளன. 1970களில் இந்த மான்களில் பல விலங்கியல் தோட்டங்களிலிருந்து தப்பின.
புக்கிட் தீமா, மெக்ரிச்சி நீர்த்தேக்கம் போன்ற வனப்பகுதிகளில் சம்பார் மான்கள் தென்பட்டுள்ளன. 1997ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் காடுகளில் மூன்று சம்பார் மான்கள் மட்டும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவற்றின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.. சம்பார் மான்கள் அரிகிவரும் விலங்கினமாக கருதப்படுகிறது.
சம்பார் மான்கள் மீண்டும் தோன்றியுள்ளது சிங்கப்பூரின் உயிரினச் சூழலுக்கு பல நன்மைகள் அளிக்கும் எனக் கூறப்படுகிறது.