தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விசாக தினத்துக்கு முந்தைய நாளில் பேருந்து சேவை நேரத்தை நீட்டிக்கும் எஸ்பிஎஸ்

1 mins read
d0bb7360-7eab-423e-898c-a51e4a21889a
விசாக தினத்துக்கு முந்தைய நாளான மே 11ஆம் தேதி 17 பேருந்து எண்களின் சேவை நேரம் நீட்டிக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விசாக தினத்துக்கு முந்தைய நாளான மே 11ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட சில பேருந்து, ரயில் சேவைகளின் நேரம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு, டௌன்டவுன் தடங்களில் ஓடும் ரயில்கள், செங்காங், பொங்கோல் ஆகிய தடங்களில் ஓடும் இலகு ரயில் சேவைகள் அன்று கூடுதலாக அரை மணிநேரம் நீட்டிக்கப்படும் என்று பொதுப் போக்குவரத்து சேவை வழங்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் திங்கட்கிழமை (மே 5) கூறியது.

வடக்கு கிழக்கு தடத்தில் கடைசி ரயில் பொங்கோல் கோஸ்ட் நிலையத்திலிருந்தும் ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்திலிருந்தும் கிளம்பும் நேரம் முறையே நள்ளிரவு 12.00 மணி ஆகவும் பின்னிரவு 12.20 மணிக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டௌன்டவுன் தடத்தில் கடைசி ரயில் புக்கிட் பாஞ்சாங் நிலையத்திலிருந்தும் எக்ஸ்போ நிலையத்திலிருந்தும் கிளம்பும் நேரம் முறையே பின்னிரவு 12.03 ஆகவும் 12.04 ஆகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது

செங்காங் இலகு ரயில் சேவையில் கடைசி ரயில் செங்காங் நிலையத்திலிருந்தும் பொங்கோல் ரயில் நிலையத்திலிருந்தும் முறையே பின்னிரவு 1.06 மணிக்கும் 1.09 மணிக்கும் கிளம்பும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் 17 பேருந்து எண்களின் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்