பொதுப் போக்குவரத்து சேவை நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் இணையத்தளமும் செயலியும் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் முடங்கியது.
இந்தத் தகவலை வியாழக்கிழமை (ஜனவரி 22) காலை 8.30 மணிவாக்கில் சமூக ஊடகங்கள்வழி எஸ்பிஎஸ் நிறுவனம் தெரிவித்தது.
செயலியில் முடக்கம் குறித்த அறிவிப்பு இருந்தது. இணையப்பக்கத்தைப் பொதுமக்களால் பார்க்க முடியவில்லை.
பிற்பகல் 12.50 மணிவாக்கில் இணையத்தளம், செயலி வழக்கம்போலச் செயல்படத் தொடங்கிவிட்டதாக எஸ்பிஎஸ் தனது சமூக ஊடகப் பக்கங்கள் வழியாகத் தெரிவித்தது.
இணையத்தளம், செயலி முடங்கியபோது போக்குவரத்துச் சேவைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று எஸ்பிஎஸ் நிறுவனம் குறிப்பிட்டது.
எதனால் இணையத்தளமும் செயலியும் முடங்கின என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எஸ்பிஎஸ் இணையத்தளம் வியாழக்கிழமை பின்னிரவுடன் காலாவதியானதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

