விபத்துக்குள்ளான காரில் இருந்து 78 வயது ஓட்டுநர் மீட்பு

விபத்துக்குள்ளான காரில் இருந்து 78 வயது ஓட்டுநர் மீட்பு

1 mins read
36746175-d352-47a6-869d-b104605c6703
ஆடவர் காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மே 19ஆம் தேதி தோ பாயோவில் விபத்துக்குள்ளான காரில் இருந்து 78 வயது ஓட்டுநரை வெளியேற்றியுள்ளது.

லோரோங் 1 தோ பாயோவில் நடந்த விபத்தில், கார் ஒன்று சறுக்கியதாக நம்பப்படுவதாக பிற்பகல் 1.10 மணிவாக்கில் தனக்குத் தகவல் கிடைத்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் காவல்துறை கூறியது.

சாலையோரத் தடுப்புவேலியும் காரின் முன்பகுதியும் உடைந்திருப்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் படங்களும் காணொளியும் காட்டின.

ஓட்டுநரின் இருக்கையில் ஆடவர் சிக்கியிருந்ததாகவும், நீரழுத்த மீட்புக் கருவியைக் கொண்டு அவரை வெளியேற்றியதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அவர் டான் டொக் செங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.

சம்பவ இடத்தில், குறைந்தது ஏழு குடிமைத் தற்காப்பு அதிகாரிகளோடு, இரண்டு குடிமைத் தற்காப்பு வாகனங்கள், ஓர் அவசர மருத்துவ வாகனம், மூன்று காவல்துறை வாகனங்கள் ஆகியவை பணியில் அமர்த்தப்பட்டன.

யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைகாவல்துறைதோ பாயோஆடவர்விபத்துகார்