மலாக்கா-சிங்கப்பூர் ஸ்கூட் பயணச்சீட்டு விலை $24.77 முதல் தொடக்கம்

1 mins read
4a882849-c2cb-4476-b281-944a52e4946f
வரும் அக்டோபர் 23ஆம் தேதி முதல், மலாக்கா-சிங்கப்பூர் இடையே வாரத்துக்கு ஐந்து முறை விமானச் சேவை வழங்கவிருப்பதாக ஸ்கூட் அறிவித்திருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு அக்டோபர் 23ஆம் தேதி முதல், மலாக்கா-சிங்கப்பூர் இடையே வாரத்துக்கு ஐந்து முறை விமானச் சேவை வழங்கவிருப்பதாக ஸ்கூட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது.

சிங்கப்பூருக்கும் மலாக்காவுக்கும் இடையேயான 55 நிமிட விமானச் சேவைக்கான பயணச்சீட்டுகள் இப்போது விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

வாரயிறுதியில் மலாக்கா சென்றுவர இருவழி விமானச் சேவைக்கான பயணச்சீட்டுகள் ஏறக்குறைய $118க்கு (செயல்முறை கட்டணங்களைச் சேர்க்காமல்) விற்கப்படுகின்றன. வாரநாள்களுக்கான பயணச்சீட்டுக் கட்டணம் இதைவிட சற்றுக் குறைவு.

மலாக்கா-சிங்கப்பூர் ஒருவழி விமானச் சேவைக்கான பயணச்சீட்டுகளின் விலை $24.77லிருந்து (செயல்முறை கட்டணங்களைச் சேர்த்து) தொடங்குகின்றன.

மலேசிய ரிங்கிட்டில் பயணச்சீட்டு விலையைப் பார்க்கையில், அது 76 ரிங்கிட் (S$22.88) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (செப்டம்பர் 16) நிலவரப்படி, சிங்கப்பூர்-மலாக்கா ஒருவழி விமானச் சேவைக்கான குறைந்தபட்ச பயணச்சீட்டு விலை $70ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, அக்டோபர் 27, 28ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கான விலை.

மலேசிய ரிங்கிட்டில் அதே தேதிகளுக்கான பயணச்சீட்டு விலை 250.56 ரிங்கிட்டாக (S$75.43) உள்ளது.

குறிப்புச் சொற்கள்