ஆசிய பசிபிக் நகர்களுக்கு கூடுதல் விமானச் சேவைகளைச் சேர்க்கும் ஸ்கூட்

ஆசிய பசிபிக் நகர்களுக்கு கூடுதல் விமானச் சேவைகளைச் சேர்க்கும் ஸ்கூட்

1 mins read
93091ce3-7a08-448b-8a03-fcc3cb0c8764
மலிவுக் கட்டண விமானமான ஸ்கூட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான ஸ்கூட், சுற்றுப்பயணிகளிடையே புகழ்பெற்ற இடங்களுக்குக் கூடுதல் விமானச் சேவைகளை அறிவித்துள்ளது.

வரும் மாதங்களில் விமானப் பயணங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு விமானச் சேவைகளை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படுவதாக ஸ்கூட் வெள்ளிக்கிழமை (மே 9) தெரிவித்தது.

தைப்பே, சோல் (தைப்பே வழியாக) நகர்களுக்கான விமானப் பயணங்கள் வாரத்திற்கு ஐந்து முறையிலிருந்து ஆகஸ்ட் 2லிருந்து அன்றாடமாக அதிகரிக்கும்.

ஆஸ்திரேலியாவின் பெர்த், சிட்னி நகர்களுக்கான விமானச் சேவைகள் முறையே ஆகஸ்ட் 4லிருந்தும் அக்டோபர் 5லிருந்தும் வாரத்திற்கு 14 தடவையாக உயரும்.

பிலிப்பீன்சின் இலோய்லோ சிட்டிக்கு விமானச் சேவைகள் ஜூன் 6 முதல் வாரத்திற்கு இரண்டிலிருந்து நான்கு தடவையாக அதிகரிக்கும். ஜூன் 24 முதல், சீபுவுக்கு விமானச் சேவைகள் வாரத்திற்கு ஏழிலிருந்து 10 தடவையாக கூடும். ஆகஸ்ட் 30 முதல், தவோ நகருக்கு விமானச் சேவைகள் வாரத்திற்கு ஒன்பதிலிருந்து 12 முறையாக உயர்த்தப்படும்.

தாய்லாந்தின் கோ சாமுய்க்கு ஜூன் 24 முதல், விமானச் சேவைகள் வாரத்திற்கு 21லிருந்து 25 தடவையாக அதிகரிக்கப்படும். வியட்னாமின் ஃபூ குவுக் நகருக்கு ஏப்ரல் 15 முதல், விமானச் சேவைகள் வாரத்திற்கு ஐந்திலிருந்து ஆறு முறையாக அதிகரித்துள்ளன.

இந்தோனீசியாவின் பல்வேறு நகர்களுக்கு ஸ்கூட் அதன் விமானச் சேவைகளை மார்ச் 30 முதல் அதிகப்படுத்தியுள்ளது. ஜகார்த்தாவுக்கு வாரந்தோறும் விமானச் சேவைகளின் எண்ணிக்கை 19லிருந்து 25ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்